Thursday, January 14, 2021

மஞ்சள் பூசணிக்காய் மருத்துவ குணங்கள்

மஞ்சள் பூசணிக்காய் மருத்துவ பயன்கள்


பரங்கி பரவலாக விளையக்கூடிய ஒரு காய். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய் 4-6 கிலோ எடை கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு இப்படியொரு நிறத்தைக் கொடுப்பது, அதன் தோல் மற்றும் உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்றதாகவும் இருக்கும். இதன் உள் பகுதியில், சின்ன சின்ன வெள்ளை நிறமுடைய விதைகள் ஒன்றோடு ஒன்று வலைபோலப் பின்னிப் பிணைந்திருக்கும்.
மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம்.

வைட்டமின் ஏவை அபரிமிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் (Mucous Membrances) பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.
இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது. Zeaxanthin என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது. பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் (Carotenoids) அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம். தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய்.

பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.

மலச்சிக்கல்

உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறதா? என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட முடியவில்லையா? அப்ப மஞ்சள் பூசணி ஜூஸை தினமும் குடியுங்கள். ஏனெனில் மஞ்சள் பூசணியில் உள்ள மலமிளக்கும் பண்புகள் மலச்சிக்கலைத் தடுப்பதோடு, வயிற்றுப் போக்கு பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.

No comments:

Post a Comment

வாழை தண்டு மருத்துவ பயன்கள்

வாழை தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள். வாழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வ...