Thursday, January 14, 2021

முருங்கைக்காய் மருத்துவ பயன்கள்

முருங்கைக்காய் பொதிந்து கிடக்கும் மருத்துவ பயன்கள்

Drumstick tree (முருங்கை) Health Benefits
முருங்கைக்காய் அதிக சத்து நிறைந்த காயாகும். முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.

சுவாச பிரச்சனைகள்

ஆஸ்துமா, பிராங்கட்டிஸ் போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய் சிலருக்கு ஏற்படுகிறது. மேலும் ஜுரம் ஏற்படுவதால் சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் இரும்பு சத்து நிறைந்துள்ள முருங்கைக்காயை பக்குவம் செய்து தினமும் சாப்பிடுவதால் நுரையீரலுக்கு அதிகம் பிராணவாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க முடிகிறது. நுரையீரலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

நீரிழிவு நோயில் டைப் 2

நீரிழிவு நோயில் டைப் 2 வகை நீரிழிவு நோய் சற்று கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் ஒரு நோயாக இருக்கிறது. முருங்கைக்காயில் இருக்கும் வேதிப்பொருட்கள் இந்த வகையான நீரிழிவு நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்கும் ஒரு இயற்கை உணவாக முருங்கைக்காய் இருக்கிறது.
முருங்கைக்காய் அதிகளவு விட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் முருங்கையில் விட்டமின்கள் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்னோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.
இதில் தாதுஉப்புக்கான கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், குறைந்த எரிசக்தி, அதிகளவு நார்சத்து, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. போன்றவைகள் உள்ளன.
முருங்கையில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை, நாட்டு முருங்கை, செடிமுருங்கை என பலவகைப்படும். இதில், நாட்டு முருங்கை மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடி முருங்கையில் காய்கள் சற்று சதைபற்றுடன் இருக்கும்.

முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள்

1. முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
2. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.
3. வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.
4. குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
5. மேலும் மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
6. முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் காணப்படுகிறது. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகின்றன.
7. முருங்கைக்காயானது தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் வல்லது.
8. ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.
9. முருங்கைக்காய் தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.
10. முருங்கைகாயில் செரோடோனின், டோபமைன் மற்றும் நோரர்டேன்லைன் போன்றவை உள்ளன. இவை நினைவாற்றல், மனநிலை மற்றும் உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
11. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் முருங்கை பூ, முருங்கை இலை அதிக அளவில் சாப்பிடும் பொழுது நரம்புகளுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும்.
12. முருங்கை பூ மற்றும் காயை உண்ணும்பொழுது நியாபக மறதியை போக்கி, நினைவாற்றலைத் தூண்டும்.

No comments:

Post a Comment

வாழை தண்டு மருத்துவ பயன்கள்

வாழை தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள். வாழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வ...