Tuesday, May 18, 2021

பீட்ரூட்டின் வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

 


பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்


Benefits of beetroot in Tamil

பூமிக்கு அடியில் வளரும் வகையை சார்ந்த பீட்ரூட் ஆனது தன்னுள் பல்வேறு அற்புதங்களை அடக்கியது. பீட்ரூட் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தரும் என்பதை இங்கே பார்க்கலாம்.


கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், ரத்த சோகையை சரிப்படுத்தும், பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லது. 

ஆண்மையை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸாக உள்ளது.பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், ஆண்மை குறைவிற்கு காரணமாக அமையும். இந்த தருணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொண்டால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொண்டு ஆண்மை பிரச்சனை வராமல் இருக்கும்.பீட்ரூட்டை மிச்சியில் போட்டு அரைத்து அதனை அப்படியே சாப்பிட பிடிக்காது. இதன் உடன் ஆப்பிள், ஆரஞ்சு, இஞ்சி இதில் ஏதாவது ஒன்றை அதனுடன் சேர்ந்து ஜூஸாக எடுத்துக் கொண்டால் மிக சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் இதனுடன், வெஜிடேபல்ஸ், கேரட், முள்ளங்கி இதில் எதாவது ஒன்றுடன் சேர்ந்து சாப்பிடலாம்.

பீட் ஜூஸ் தினமும் எடுத்துக் கொள்ளும் போது, சர்க்கரை நோய் உள்ளவர்கள், சுகர் அளவை அடிக்கடி செக் செய்துக் கொள்வது நல்லது. பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும். 

மார்பக  புற்றுநோயை தடுக்கும் 

பீட்ரூட் ஜூஸ் மார்பக புற்றுநோய்களைத் தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

பீட்ரூட்டில் பெட்டானின் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதே போல, வாஷிங்டன் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய்களை தடுக்கும் திறன் கொண்டுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. பீட்ரூட் ஜூஸ் உடன்  கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளும்போது,  . ​​ரத்த புற்று நோயை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயைத் தடுக்கும் என்பதும் இதற்கு முக்கிய காரணமாக பீட்ருட்டில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பொருள், கேன்சர் செல்லை அழிப்பதாக கண்டறியப்பட்டள்ளது.  இதன் சிவப்பு வன்ணத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், புற்றுநோயுடன் போராடும் வல்லமைகொண்டது.


பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
 
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

கர்ப்ப காலம்.

ஒரு பெண்ணின் வாழ்வில் கர்ப்ப காலம் என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். இக்காலத்தில் உண்ணும் உணவுகளின் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக பீட்ரூட் சாப்பிடுவதில் கவனம் தேவை. ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் தீங்கு விளைவிக்கக்கூடியவை. ஆகவே பிரசவம் முடியும் வரை பீட்ரூட் ஜூஸை குடிக்காமல் இருப்பதே நல்லது. வேண்டுமானால் எப்போதாவது ஒருமுறை பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிடலாம்.

கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால், பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடிக்காதீர்கள். வேண்டுமானால், அளவாக எப்போதாவது ஒருமுறை குடிக்கலாம்.

சுத்தமான பீட்ரூட் ஜூஸ் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை பலவீனமாக இருப்பவர்கள் அல்லது குமட்டல் உணர்வு கொண்டவர்கள் குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

No comments:

Post a Comment

வாழை தண்டு மருத்துவ பயன்கள்

வாழை தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள். வாழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வ...