Thursday, January 14, 2021

அவரைக்காயின் மருத்துவ பயன்கள்

அவரை என்பது இருபுற வெடிக்கனி அல்லது லெகூம், பெபேசி குடும்ப வகையைச்சார்ந்த பயன்மிக்க ஒரு கொடிவகை நிலத்திணை(தாவரம்) ஆகும். இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி ஆகும். இதன் காயே அவரைக்காய் எனப்படுகிறது. இக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும்.[ இதில் புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). இதில் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus) ஆகும்.

100 கிராம் அவரைக் காயில் மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து உள்ளிட்டவை அடங்கி உள்ளது.

ஒரு கப் அவரைக்காயில் சராசரியாக ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் இரும்புச்சத்தில் 33மூ அளவு இருக்கின்றது. அவரைக்காயில் 10 கிராம் புரதச்சத்தும், குறைவான கொழுப்புச்சத்தும், தேவையான அளவு கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின்களும் உள்ளன.

அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.
அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இத் ரத்தத்தைச் சுத்தபடுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
சக்கரைநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இது சிறுநீரைப் பெருக்கும், சளி, இருமலைப் போக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம் தலைச்சுற்றல், கை கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

அவரைக்காயில் அளவுக்கு அதிகமாக உள்ள அமினோ அமிலம் தான் அந்த தனிச் சுவையைக் கொடுக்கிறது.இந்த அட்டகாசமான சுவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்து மன அழுத்தத்தைப் போக்குகிறது.
அவரைக்காயில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பல சத்துக்கள் அடங்கி உள்ளன. இந்த சத்துக்களால் சீரான ரத்த ஓட்டம் நாம் பல நன்மைகளை நமக்கு கிடைக்கிறது.
       

No comments:

Post a Comment

வாழை தண்டு மருத்துவ பயன்கள்

வாழை தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள். வாழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வ...