அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளின் பயன்கள்
நம் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் மஞ்சள் நீங்கா இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பெண்களின் வாழ்வில் பெரும் முக்கியத்துவத்தை வகிக்கிறது. இந்த மஞ்சள் பெண்களின் அழகை மெருகேற்றுவதற்கு மட்டுமல்ல, இதில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ நன்மைகள் ஆண்களுக்கு சமமாகும்.
மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும் (Antiseptic). உடலில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள், மற்றும் புண்களில் மஞ்சள் சிறந்த மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதா (Ayurveda), பாரம்பரிய சீன மருத்துவம் (Traditional chinese Medicine) எனப் பல மருத்துவ முறைகளில் மஞ்சள் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் E, நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), இரும்பு, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் (ஜிங்க்) போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், பல்வேறு வகைகளில் உடலுக்கு நன்மையளிக்கிறது.
முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு.
கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்றுவலி தீரும். பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும் நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை உண்டாக்கும். கஸ்தூரி மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய, சில நிமிடங்களில் தலைவலி பறந்துபோகும்.
மஞ்சளில் இரு வகைகளில் ஒன்றை சமையலுக்கு பயன்படுத்துவோம், மற்றொன்று முகத்தில் பூசுவதற்கான மஞ்சள் ஆகும். சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.
உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.
கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.
வெறும் வயிற்றில் மஞ்சள் உட்கொள்வது வயிற்றை சுத்தம் செய்யும் முறை.
மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கும்.
மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கும்.
மஞ்சளை சிறிது எலும்பிச்சை சாறில் தேய்த்து முகத்தில் பருக்கள் உண்டாகும் இடத்தில் தடவினால் ஆரம்பத்திலேயே பருக்கள் உண்டாவதாகி தடுக்கலாம்.
மஞ்சளுடன் சிறிது வேப்பிலை அரைத்து தேய்த்தால் அம்மையால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
மஞ்சளுடன் சிறிது வேப்பிலை மற்றும் வசம்பு சேர்த்து அரைத்து தேய்த்தால் மேகப்படை, வட்டமான படைகள் மற்றும் விஷக்கடிகள் குணமாகும்.
மஞ்சளுடன் சிறிது வேப்பிலை மற்றும் வசம்பு சேர்த்து அரைத்து தேய்த்தால் மேகப்படை, வட்டமான படைகள் மற்றும் விஷக்கடிகள் குணமாகும்.
மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் போன்றவை குணமாகும்.
No comments:
Post a Comment